கல்லூரி மாணவர் வடிவமைத்துள்ள "சோலார் சைக்கிள்" மிகக்குறைந்த அளவு மின்சாரத்தில் 50 கி.மீ வரை பயணிக்கலாம்..!
மதுரையில் சோலார் பேனல் பொருத்திய மிதிவண்டியை வடிவமைத்திருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர், மிகக்குறைந்த அளவு மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்கிறார்.
கோட்டை நத்தம்பட்டியைச் சேர்ந்த தனுஷ்குமார் என்ற அந்த மாணவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுநிலை இயற்பியல் பயின்று வருகிறார். இவர் வடிவமைத்துள்ள சைக்கிளிலுள்ள பேட்டரியை சில நிமிடங்கள் மின்சாரம் மூலமாக முதலில் சார்ஜ் செய்து, 30கிலோ மீட்டர்வரையும் அந்த நேரத்தில் சோலார் மூலமாக மீண்டும் பேட்டரியில் சார்ஜ் ஏறி மேலும் 20கிலோ மீட்டர் வரையும் பயணிக்கலாம் என்கிறார் தனுஷ்குமார்.
சூரிய வெளிச்சம் குறைவாக இருந்தாலும் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் பேட்டரி தீர்ந்து போகும் நேரத்தில் பெடலிங் செய்துகொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.
Comments